300 இலங்கையர்களுடன் கடலில் மூழ்கும் நிலையிலிருந்த படகை காப்பாற்றுவதற்கு உதவுமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தாங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தார் என இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் கடல்சார் ஒத்துழைப்பு சிங்கப்பூர் வியட்நாம் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை தொடர்புகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட படகில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டு வியட்நாமை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர் என சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட படகில் ஒரு இலங்கையர் உள்ளதை மாத்திரம் தற்போதைக்கு உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர் வியட்நாமிற்கு படகு சென்றவுடன் ஏனையவர்கள் குறித்த விபரங்களை அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.