கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
514 கைதிகள் தற்போது இராணுவம் மற்றும் பொலிஸாரின் காவலில் இருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கைதிகளில் மோதல் சம்பவத்தில் ஈடுபடாத 218 கைதிகள் சேனாபுர புனர்வாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், 211 கைதிகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மோதிலில் ஈடுபட்ட மேலும் 33 கைதிகள் காணாமல் போயுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மோதிலின் போது தப்பியோடிய கைதிகளைக் கண்டுபிடிக்க இராணுவமும் பொலிஸாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.