யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணாவின் சுடர்வணக்க நிகழ்வு

448 0

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மன் தலைநகரம் பேர்லினில் இன்றைய நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பேர்லின் தமிழாலயத்தின் காரியாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வீர மறவர்களுக்கான சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கும் இப் புனித மாதத்தில் ஏனைய அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் முகமாக ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு , தொடர்ந்து சுடர்- மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தை தொடர்ந்து பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணா எப்படி தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக வும், தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராகவும் விளங்கினார் என்பதின் நினைவுரையுடன் இன்றைய சமகாலத்தில் எம்மை சுற்றி நடக்கும் அரசியல் சூழ்சியில் நாம் எப்படி கவனத்துடன் கொள்கையோடு பயணிக்க வேண்டும் எனும் விளக்கவுரையுடனும் , இப் புனித மாதத்தில் எமக்கு முன் உள்ள கடமையையும் கவனத்தில் கொண்டு சுடர்வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.