அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கெதிரான வழக்கு விசாரணைக்கு முந்தியதான முழுமையான விவாதத்துக்காக டிசம்பர் 9ஆம் திகதி அழைப்பு விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியிலிருந்து தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிக்கு செலுத்த வேண்டிய சுமார் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவை செலுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, இதனை எதிர்ப்பதாக நீதிமன்றில் அறிவித்தார்.