பொலிஸ் நிலைய கூண்டில் சுவரில் தலையை மோதிக்கொண்ட கஞ்சா வியாபாரி வைத்தியசாலையில் அனுமதி

144 0

மட்டக்களப்பில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூண்டில் அடைக்கப்பட்ட  கஞ்சா வியாபரி தனது தலையை சுவரில் மோதி உடைத்தமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (02) இரவு இடம் பெற்றுள்ளது.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான  நேற்று புதன்கிழமை பகல் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் பொலிஸ் சாஜன் ரி.கிருபா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் கருவப்பங்கேணியிலுள்ள வீட்டை முற்றுகையிட்டு அங்கு 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 21 வயதுடைய கஞ்சா வியாபாரியை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலைய கூண்டில் அடைத்துவைத்து விசாணையின் பின்னர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனா்.

இந்நிலையில் குறித்த கஞ்சாவியாபாரி அடைக்கப்பட்ட கூண்டில் சுவரில் தனது தலையை மோதி உடைத்துள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய கூண்டில் தடயங்களை பெறுவதற்காக  தடயவியல் பரிவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.