கருத்து கணிப்பில் ஹிலாரி முன்னிலை

402 0

201606071116456898_Hillary-Clinton-clinches-Democratic-presidential-nomination_SECVPFஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்பில் முக்கிய 4 மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் மாதம் 8ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.
ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடும் அதேவேளை, குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த இரண்டு வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகமையை பெற்றுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன், அண்மைய கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில்; முன்னிலையில் உள்ளார்.
வால் ஸ்டிரீட் ஜர்னல், மாரிஸ்ட் போல் மற்றும் என்பிசி நியூஸ் என்பன மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம் கொலராடோ, புளோரிடா, வடக்கு கரோலினா மற்றும் வெர்ஜீனியா ஆகிய 4 மாகாணங்களில் அவர் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.