நான்கு வகையான உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ரோல்ஸ், பராட்டா ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலைகளே 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேநீர் கோப்பை ஒன்றை 30 ரூபாவாகவும் பால் தேநீர் கோப்பை ஒன்றை 100 ரூபாவாகவும் விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.