சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கி இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய அறிக்கையின் இறுதிக்கட்டம் தற்போது தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்துவது, குறித்து கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
தயாரிக்கப்பட்ட குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் வரவு செலவுத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல்களில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் மத்திய வங்கியின் ஆளுநரும் பங்கேற்பார்கள்.
நாட்டுக்கு கடன் வழங்கும் முறையை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்த பிரதமர், சிலர் நாடு எதிர்நோக்கும் உண்மையான நெருக்கடிகள் குறித்து பேசவில்லை. ஏதோ ஒன்றை சுட்டிக்கட்டி பேசிவருவதாகவும் மேலும் தெரிவித்தார்.