60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் யானைகளின் அச்சுறுத்தலால் மக்கள் பலியாகியதன் விளைவாக, உலகில் அதிக மனித – யானை மோதல் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது.
அதற்கு தீர்வாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் முயற்சியின் கீழ், ஹபரணை பிரதேசத்தில் மாதிரி வேலியாக, ரித்திகலவை அண்மித்த பண்டிவெவ கிராமத்தில் 4.4 கிலோமீற்றர் பரப்பளவில் சமூக அடிப்படையிலான மின்சார வேலி அமைக்கப்பட்டு இன்று (29) மக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனவரி 2022 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், சினோமன் ஹோட்டல் குழுமம் மற்றும் TUI அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
மேலும், சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, 30 வருடங்களுக்கும் மேலாக இந்த விடயத்தில் ஆய்வு செய்து வரும் கலாநிதி பிருதுவிராஜ் பெர்னாண்டோ மற்றும் கலாநிதி சுமித் பிலப்பிட்டிய ஆகியோர் இத்திட்டத்திற்கு வளங்களை வழங்கினர்.