இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெற்ற பேரணி

303 0

இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது நிலம் எமக்கு வேண்டும் பேரணி நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வின்போது “எங்கள் நிலங்கள் எமக்கு வேண்டும்” “இராணுவமே வெளியேறு” “எமக்கு தேவை சுதந்திரம்” “எங்கள் நாடு தமிழீழம்” என பல கோசங்கள் ஒலிக்கப்பட்டன.தாயக உறவுகளின் போராட்டங்களோடு அவர்களுக்கு ஆதரவுக்குரலாக எப்போதும் நாங்கள் இருப்போம் எனவும் அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டதோடு நிகழ்வு நிறைவடைந்தது.