அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் மெல்போர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காக போராட்டம் நடாத்தினர்.ரணில் விக்கிரமசிங்கவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கிய டீக்கின் பல்கலைக்கழகத்தில் நேற்று ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
இதற்காக அவர் நேற்று டீக்கின் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தபோது வெவ்வேறு காரணங்களுக்காக சிங்களவர்களும் தமிழர்களும் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.போர்க்குற்றவாளிகளைக் கௌரவிக்காதே போன்ற வாசகங்களை ஏந்தியதுடன், புலிக்கொடியையும் ஏந்தி தமிழர்கள் போராட்டம் நடாத்தினர்.
இந்நிலையில், போர் வீரர்களைத் தண்டிக்காதே, சமஷ்டியை வழங்காதே போன்ற வாசகங்களை ஏந்தி சிங்களவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பெருங்கடலில் கப்பல் பயணங்கள் தொடர்பாக உரையாற்றிவிட்டு இராப்போசனத்திலும் ஈடுபட்டார்.