அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 271 பேர் மீது வழக்கு பதிவு

97 0

தீபாவளி பண்டிகை நாளன்று, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமேபட்டாசு வெடிக்க தமிழக அரசுஅனுமதி அளித்திருந்தது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் அக்.23 முதல் 25-ம் தேதி காலை வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறிபட்டாசு வெடித்தது தொடர்பாக 271 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்ததாக 69 வழக்குகளும் என மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.