மேலும், குறித்த நபர்களும் அவர்கள் பயணித்த வாகனங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யால பூங்காவுக்குள் வாகனங்களை செலுத்தி வன விலங்குகளை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், அஜாக்கிரதையாகச் சென்ற வாகனக் குழுவுடன் சென்ற வழிகாட்டிகளும், நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறிய பூங்காவின் பாதுகாவலர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர், இன்று (26) அறிவித்தார்.
குறித்த நபர்களின் அடையாள அட்டை இலக்கம், முகவரி, வாகன இலக்கம் மற்றும் முறையற்ற நடத்தையை நிரூபிக்கக்கூடிய அனைத்து ஆதாரங்கள் உட்பட அனைத்து தகவல்களும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்திருந்தமைக்கு அமைய அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த குழுவினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.