கல்குடா பொலிஸ் பிரிவில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை வீதி பட்டியடிச்சேனையைச் சேர்ந்த த.காந்திமதி வயது (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
24 ஆம் திகதி தீபாவளி தினமன்று உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற இளைய சகோதரி மற்றும் அவரது மகன் ஆகியோர் உயிரிழந்தவரின் மகனுடன் ஏற்பட்ட முரன்பாடு கைகலப்பாக மாறியதினால் இருசாராரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதனால் இதன்போது இவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.