ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியை ஏற்றுக் கொள்ள மறுப்பு!

285 0

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் அந்தபதவியை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ரொபர்ட் ஹவார்ட் இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபலின் ரஷ்யாவுடன் கொண்டிருந்த தொடர்பின் காரணமாக இந்த பதவியில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து டொனால்ட் ட்ரம்பினால் ரொபர்ட் ஹவார்ட் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

எனினும் தமது குடும்ப மற்றும் நிதிச்சார்ந்த விடயங்களை முன்வைத்து தாம் இந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.