பொதுஜனபெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்த ஆர்வம்

131 0

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜனபெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இலங்கைக்கான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

சீன கம்யுனிஸ்ட் கட்சி பொதுஜன கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஆர்வமாக உள்ளோம் என சீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.