மீண்டும் நொக்கியா 3310

299 0

நொக்கியா கைப்பேசி என்றவுடனேயே எமது மனதில் முதலில் தோன்றுவது 3310 என்ற கைப்பேசியே ஆகும்.

அந்த அளவுக்கு அதன் தாக்கம் எம் மனதில் உள்ளது. அதன் கனத்த வெளிப்புற தோற்றம், பலமுறை கீழே விழுந்தாலும் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாமை போன்றமை இதற்கான காரணங்களில் சிலவாகும்.

கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இக்கைப்பேசி மீண்டும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்மார்ட்போன்களுக்கு மேலதிகமாக ஒரு கைப்பேசியை வைத்துக்கொள்பவர்களை இலக்கு வைத்து இக்கைப்பேசி வெளியாகவுள்ளது.

நீண்ட நேரம் நீடிக்கும் பெட்டரி அதற்கான காரணங்களில் காரணமாகும்.

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் இக்கைப்பேசி அறிமுகப்படுத்தப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் மாற்றங்கள் சிலவற்றுடன் இது வெளியிடப்படுமெனெ தெரிவிக்கப்படுகின்றது.

HMD குளோபல் என்ற நிறுவனமே தற்போது நொக்கியா கைப்பேசிகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.