கிழக்கு மத்திய வங்கக்கடல் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள தாகவும், தமிழகம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு ள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மழை கொட்டி தீர்த்தது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.