சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு – கதிரான பகுதியில் காவற்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் நீர்கொழும்பு, மாரவிலை, கல்முனை மற்றும் முனைத்தீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.