முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை குறித்த பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தௌிவு படுத்தியுள்ளார்.
நேற்று வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
தான் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் பிரதம நீதியரசர் தன்னை சந்தித்து தங்களின் தேவைக்கு ஏற்றவாறு செயற்பட தயார் என கூறியதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
இதன் காரணத்தினால்தான் அவரை பதவி நீக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தான் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் அதுவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.