பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகையில் சாயத்தினை கலந்து விற்பனை செய்ய முயன்ற பொலன்னறுவை வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகர்வோர் அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றிவளைப்பின் போது 3 ஆயிரம் கிலோ சாயம் கலந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகைக்கு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது