மன்னார் – கீரி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றின் எரிபொருள் தாங்கியில் இருந்து டீசல் திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் நேற்று (21.10.2022) இடம்பெற்றுள்ளது.
மன்னார் – கீரி கிராமத்தில் அன்பு சகோதரர் இல்லத்தில் சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்து செல்லும் பேருந்து வண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட போது சுமார் 40 லீட்டர் டீசல் திருடப்பட்டுள்ளது.பாடசாலை முடிந்து மாணவர்களை ஏற்றிச் செல்ல முயன்ற போது குறித்த சம்பவம் தெரியவந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.