நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட அவருடைய குழுவினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த பிரதான போதைப்பொருள் வர்த்தகர் நீர்கொழும்பில் இருந்து பெரியமுல்ல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை எடுத்துச் செல்லும் போது பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 750 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபர் 40 வயதுடைய கல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்மேலும் இதன் போது கைதுசெய்யப்பட்ட ஏனைய மூவரும் 35 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் பாலாவி, தலைமன்னார் மற்றும் கந்தன்குளிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படடுள்ளனர்.சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்