கடுவெல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடுவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடுவெல பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடுவெல, கனேமுல்ல மற்றும் கடவத்த போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றின் உதிரிபாகங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் அவரிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய ஆணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.