நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்

256 0

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவர் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க வரும் சனிகிழமை (நாளை மறுநாள் 18-ந்தேதி) தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட இருக்கிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.

இதுகுறித்து தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில் ‘‘நம்பிக்கை வாக்கெடிப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வாய்ப்பில்லை’’ தமிழகத்தின் எதிர்காலம் தி.மு.க. வெற்றியை பொறுத்துதான் அமையும் என தெரிவித்துள்ளார்.