ரகர் வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பான முதலாவது சந்தேகநபரான நாரஹேன்பிட்டி காவல்நிலையத்தின் குற்ற தடுப்பு பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரியான சுமித் பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் கடும் நிபந்தனைகளில் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
இதன்படி, ஒருலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் 10 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வழக்கு விசாரணைக்கு பாதிக்கு ஏற்படுத்தினால் பிணை ரத்துச் செல்லப்படும் எனவும், வழக்கு நிறைவடையம் வரையில் பிணை வழங்கப்படாது எனவும் நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.