போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போது அரசியல் யாப்பு தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதன் ஊடாகவே நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் அரசியல் யாப்பு தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், இதற்கான வழிப்புணர்வு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990ம் ஆண்டுகளில் தமது அரசாங்கம் முகம் கொடுத்ததைப் போல் அன்றி, தற்போதைய அரசாங்கம் கடும்போக்குவாதிகளால் பெரும் சவாலுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.
பொதுபல சேனா, ஹெல உறுமய மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியினர் போன்ற தரப்பினர் தற்போது சவாலாக இருக்கின்றனர்.
இதனாலேயே கருத்துக் கணிப்பில் தோல்வி அடைந்துவிடக்கூடும் என்ற ஐயம் முன்வைக்கப்படுகின்ற போதும், அதில் வெற்றி பெற முடியும் என்று சந்திரிக்கா கூறியுள்ளார்.