பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் – மஹிந்த

156 0

எமது அரசாங்கத்தில் ஒருசில குறைபாடுகள் காணப்பட்டது என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு வெட்கப்படவில்லை.அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தற்போது விமர்சனங்களுக்கும்,சேறு பூசல்களுக்கும் உள்ளாகியுள்ளோம்.ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒன்றிணைந்து  எழுவோம  என்ற தொனிப்பொருளின் கீழ் நாவலபிடி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ம மக்கள் கூட்டங்களில் மகிழ்வுடன் கலந்து கொள்கிறோம்.எமது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர நாவலபிடி பிரதேச மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை மறக்கவில்லை.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிப்பெற செய்ய மக்கள் தயாராகவுள்ளார்கள்.அதுவே எமது பலம்.

நாடு என்ற ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து மீண்டெழும் போது பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டது.பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல,உலக நாடுகள் அனைத்தும் ஏதாவதொரு வழியில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் புதிய கொள்கை மற்றும் சிந்தனைகளுடன் முன்னோக்கி செல்கிறது.தற்போதைய நெருக்கடி எமக்கு ஒன்றும் புதிதல்ல,நெருக்கடியான சூழ்நிலையில் ஒன்றிணைந்து அவற்றை வெற்றி கொண்டோம்.பெரும்பாலானோர் இதனை அறியவில்லை.அறிந்தாலும் அவர்கள் அதனை குறிப்பிடுவதில்லை.

பிரச்சனைகளை பிறர் மீது சுமத்தி தப்பித்துக் கொள்ளவே பெரும்பாலானோர் தற்போது முயற்சிக்கிறார்கள்.அதற்கு எம்மை இலகுவாக பிடித்துக் கொண்டுள்ளார்கள்.அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் விமர்சனங்களுக்கும்,சேறு பூசல்களுக்கும் உள்ளாகியுள்ளோம்.இறந்தகாலத்தை ஆராய்ந்து எதிர்கால திட்டங்களை வகுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் தவறு இழைக்காததை போன்று ஒருசிலர் இன்று எம்மீது குறை கூறுகிறார்கள்.நாட்டில் அமைதி நிலவுவதையும்,நாடு என்ற ரீதியில் சுயாதீனமாக முன்னேற்றமடைவதையும் ஒருசிலர் விரும்புவதில்லை.இதனை மாற்றியமைக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தில் குறைப்பாடுகள் காணப்படுகள் காணப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பகிரங்கமாக அதனை குறிப்பிடுவதையிட்டு வெட்கப்படவில்லை.விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் தீர்வு காண முடியாது.பொது இணக்கப்பாட்டுடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண  அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

ஊடகங்கள் நாட்டுக்காக செயற்பட வேண்டும்.எம்மை விமர்சிப்பதை ஒரு தரப்பினர் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.நாம் வீழும் போது ஒரு தரப்பினர் எம்மை கண்டு நகைப்பார்கள்,வெற்றி பெறும் போது வரவேற்பார்கள் இதுவே அரசியல் நிலைமையாக உள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரமுன அரசியல் ரீதியில் மீண்டும் வெற்றி பெறும் என்றார்.