துப்பாக்கிதாரி ஒருவர் சிக்கினார்

119 0

துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரைப் படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ ரக துப்பாக்கி, 11 ரவைகள் மற்றும் 5 கிராம் 11 மில்லி கிராம் ஹெரோயின் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் புளூமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய பிரதேசத்தில் மற்றும் 12 ஆம் திகதி கடலோர பொலிஸ் பிரிவில் மூவரைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவங்களில் குறித்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மொரகஸ்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.