விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தீவிரவாத போக்குடைய தமிழ் சிங்களவர்கள் உள்ளனர் சிங்கள தீவிரவாதிகள் நான் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளித்தாக தெரிவித்தனர்,
தமிழ்தீவிரவாதிகள் நான் விடுதலைப்புலிகளை அழித்தேன் என தெரிவித்தனர் இரண்டும் சரியான விடயமில்லை.
நாங்கள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினோம்.
ஆனால் இன்று நான் இலங்கையின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துகி;ன்றேன் – அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து நன்றியடைகின்றேன்.
உலகின் அழகான இடங்களில் இலங்கையும் ஒன்று
இலங்கை தனது எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டும் எப்படி பொருளாதாரரீதியாக அபிவிருத்தி செய்வது குறித்தும் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்;;- குறிப்பாக வடமாகாணத்திற்கு.
அதேவேளை தாய்மார் மனைவிமார் கணவன்மார் மகள்மார் உட்பட பலர் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தங்களின் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளனர்.
ஆகவே இலங்கை காணாமல்போனவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்கவேண்டும்- ஆயுதமோதலின் போது காணாமல்போதல் உயிரிழப்பு என்பது சாத்தியமே.
இலங்கை இது எவ்வாறு இடம்பெற்றது இடம்பெற்றிருக்கலாம் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.
ஜனாதிபதி நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளிற்கு தீர்வை காண்பது குறித்துஉறுதியாகவுள்ளார் என்பதை நான் அறிவேன் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களையும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்ததன் காரணமாகவே சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வந்தது.
என்னால் இலங்கையின் பொருளாதார சூழல் சவாலகள் குறித்து பேச முடியும்,எதிர்காலத்திற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கமுடியும்,
ஆனால் ஜெனீவா வர்ணணையாளராக மாறுவதற்கு நான் முயலவில்லை,அது நான் செய்ய விரும்பாத ஒன்று