வார இறுதியில் மின்வெட்டு நேரத்தை குறைப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலையால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் குறைந்த நேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான இயலுமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.