கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் புதிய பாலங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

145 0

தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையே அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு, 12 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம்.

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் மேச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தொளசம்பட்டி சாலையில், 688.8 மீட்டர் நீளத்திற்கு 18 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம். விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தையும் கடலூர் மாவட்டம், மேல் குமாரமங்கலத்தையும் இணைக்கும் வகையில் பெண்ணையாற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளத்திற்கு 27 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட மேம்பாலம். என மொத்தம் 58 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.