ரவியின் கணக்கால் அரசாங்கத்துக்கு நட்டம்

253 0

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு -செலவுத் திட்ட யோசனை காரணமாக, அரசாங்கத்துக்கு 6,500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.   கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது உரையாற்றிய, அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, “இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனங்களை உருவாக்கியிருந்தால், அந்த வாகனங்களை அபராதத் தொகையுடன் பதிவுசெய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

“சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கணிப்பின்படி, வாகனமொன்றை பகுதி பகுதியாகக் இறக்குமதி செய்தால், முழுமையான வாகனத்துக்கு 6 இலட்சத்து 61ஆயிரத்து 268 ரூபாய் மாத்திரமே செலுத்த வேண்டும். அதேநேரம், முழுமையான வாகனத்தை இறக்குமதி செய்யும் முறையின் கீழ், சிறிய ரக கார் ஒன்றுக்காக 35 இலட்சத்து 75ஆயிரம் ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால், நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது” என, அவர் மேலும் கூறினார்.