முதல்-மந்திரிகள் மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்காதது வருத்தம்

451 0

201607171207287328_tamilisai-soundararajan-comment-CM-conference-not_SECVPFகொடைக்கானலில் மருத்துவர்களுக்கான முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அருகில் உள்ள வில்பட்டி கிராமத்துக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டார். 

தன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் திறந்தவெளி கழிப்பிடத்தை உபயோகிப்பது சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ளது.

எனவே தமிழக அரசு இதுகுறித்து 3 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும். இப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கீழ்குண்டாறு திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தீவிரவாதிகள் கொடைக்கானல் மலைப்பகுதியை பயிற்சி அளிப்பதற்கு உபயோகிப்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் அரசு கண்காணிக்க வேண்டும். மலை கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், முதியோர்களுக்கான பென்சன் தொகை பெறுவதற்கும் வசதி செய்து தர வேண்டும்.10 ஆண்டுகளுக்கு பின்பு பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் மாநாட்டினை கூட்டியுள்ளார். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது வருத்தமளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் அவர் அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சந்தித்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, நகராட்சி கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் உடன் சென்றனர்.