அளுத்கம பிரதேசத்தில் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அளுத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி-கொழும்பு பிரதான வீதியில் அளுத்கம நகரத்தில் கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு , அவர் பேருவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் உத்தியோகத்தருமாவார்.
மேலும், காயமடைந்த மற்றைய மேட்டார்சைக்கிளை செலுத்திய நபர் மற்றும் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த ஏனைய இருவர் உட்பட மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.