மருந்து உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்

160 0

கட்டுநாயக்கவில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்துள்ளார்.

இதன் மூலம், இலங்கை ஒரு நிலையான தேசிய கொள்கையை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,  ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தேசிய கொள்கை மாறக்கூடாது என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன,இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண,  பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,   பவித்ரா வன்னியாரச்சி,  துமிந்த திசாநாயக்க, மயந்த திஸாநாயக்க, சுஜித் சஞ்சய, ஹர்ஷன ராஜகருணா, நிமல் லன்சா, ஜே.சி அலவத்துவல, எரான் விக்ரமரத்ன,  பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, யாடென் லெபோரட்டீஸ் மருந்து உற்பத்தி நிறுவன   தலைவர் சஷிமால் திசானாயக்க ஆகியோரும்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.