இன்று மாலை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம்மறுப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சாலிய பீரிஸ் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை என தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல தரப்பினர் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
வாதங்களை செவிமடுத்த நீதவான் ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகள் சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஏனையவர்களின் உரிமைகளிற்கு தடைவிதிக்காத எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடையில்லை வன்முறைகள் இடம்பெற்றால் அதனை தடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.