காலிமுகத்திடலில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைத்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை எந்த அடிப்படையில் கலைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்தனர் என்ற விபரத்தை 24 மணிநேரத்தில் பொலிஸார் சமர்ப்பிக்கவேண்டும் என இலங்கைமனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட நால்வர் இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.