80 லீற்றர் கசிப்பைக் கடத்திய 4 பேர் கைது

124 0

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இருந்து வவுணதீவு பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக இரு வெவ்வேறு பகுதிகளில் இரு மோட்டர்சைக்கிளில்  80 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்ற 4 பேர் கொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக பக்கோ இயந்திரம் கொண்டு மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் வவுணதீவில் வைத்து கடந்த 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமியின் ஆலோசனைக்கமைய குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் சம்பவதினமான நேற்று மாலை வவுணதீவ புளியடிமடு மற்றும் காஞ்சரம்குடா சந்தியில் இருகுழுக்களாக வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது கொக்கட்டிச்சோலையில் இருந்து வவுணதீவுக்கு மோட்டர்சைக்கிள் 25 லீற்ர் கலன் ஒன்றில் கசிப்பை கடத்திக் கொண்டுவந்த இருவரை புளியடிமடுவில் வைத்து கைது செய்தனர்.

அதேவேளை அவ்வாறே காஞ்சரம்குடா சந்தியில் வைத்து கசிப்பு கடத்தி வந்த இருவர் உட்பட நான்கு பேரை  80 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன் இரு மோட்டர்சைக்கிள்களையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்வர்கள் கொக்கட்டிச்சோலை, பனையறுப்பான், முனையக்காடு, சில்லுக்கொடிச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த 38,22,28,18 வயதுடையவர்கள் என தெரிவித்த அவர்.

இதேவேளை பாவற்கொடிச்சேனை சிவன்கோவில் வீதியிலுள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக பக்கோ இயந்திரம் கொண்டு மணல் அகழ்வில் ஈடுபட்ட 22 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் பக்கோ இயந்திரத்தை மீட்கப்பட்டுள்ளதுடன் இரு வௌ;வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.