இலங்கை – இந்திய கூட்டுச்சதியால் பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பலாலி படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
யாழ். மாவட்ட தளபதி
லெப்.கேணல் குமரப்பா
(பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
திருமலை மாவட்ட தளபதி
லெப்.கேணல் புலேந்திரன்
(குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)
மேஜர் அப்துல்லா
(கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் பழனி
(பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் கரன்
(வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)
கப்டன் மிரேஸ்
(தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் நளன்
(கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் அன்பழகன்
(தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் தவக்குமார்
(சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட்
(கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்
(ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.)
இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று
கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.)
ஆகியோரும் வீரசாவினைத் தழுவிக் கொண்டார்கள்.
இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் இலண்டன் சட்டன் பகுதியில் நினைவு கூரப்பட்டது .நிகழ்வின் பொதுச்சுடரினை திருமதி சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.தமிழீழத் தேசியக் கொடியினை லெப்டினன் கேணல் புலேந்திரன் அவர்களின் மகன் திரு. சீலன் அவர்கள் ஏற்றிவைத்தார் . தொடர்ந்து ஈகைச்சுடரினை திருமதி சுஜி ஆனந்த் ஏற்றி வைத்தார் .தாயாக விடுதலை போரிலே வீரச்சாவை தழுவி கொண்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தபட்டது .
தொடர்ந்து, திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை சுபாசினி மற்றும் றஜனி அவர்களும் அணிவித்தார்கள்.
தொடர்ந்து மக்கள் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினார்கள் .
இந்நிகழ்வில் எழுச்சி நடனங்கள், நினைவெழுச்சி உரைகளை தொடர்ந்து 2022 ல் எக்செல் ( Exel) மண்டபத்தில் நடைபெற இருக்கும் மாவீரர்நாள் பற்றிய விடயங்கள் மக்களுடன் பகிரப்பட்டு துண்டுப் பிரசுரங்களும் கையளிக்கபட்டது . நிறைவாகத் தமிழீழ தேசியக்கொடி கையேந்தலுடன், தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது .