குற்றவாளிகளின் தெரிவே ரணில்

116 0

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வேளையில் நாட்டை மீட்க எவரும் முன்வராத நிலையில் தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆனால் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை, அவரை குற்றவாளிகள் ஒன்றாக சேர்ந்து தெரிவு செய்தார்கள் என்பதே எமது நிலைப்பாடாகும். ராஜபக்ஷ அணி அரசியல் ரீதியாக முடக்கப்பட்ட நிலையில், மக்கள் எதிர்ப்பு பலமடைந்த நிலையிலும், ஊழல் குற்றங்களுக்கு எதிராக பலமான நிலைப்பாடொன்று உருவாக்கிக்கொண்டிருந்த நிலையில் அவற்றில் இருந்து தம்மை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக  ராஜபக்ஷ கூட்டணியால் ரணிலை தெரிவு செய்தனர் என்றார்.

நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்க  எம்மாலும் நாட்டை பொறுப்பேற்க முடியும், ஆனால் அது மக்கள் ஆணையுடன் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.  இலங்கைக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு இருப்பதாக ஜனாதிபதி கூறினாலும், இலங்கைக்கான ஒத்துழைப்பு எவ்வாறானது என்பதை ஜெனிவாவில் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே சர்வதேசம் எமக்கு கூறும் செய்தி என்ன என்பதை இப்போதாவது கருத்தில் கொள்ளவேண்டும் என்றார்.