துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அந்தந்தத் துறைகள் குறித்து பொருளாதார ஊக்குவிப்பு முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதி தேசிய சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்தீரத்தன்மைககான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய சபையினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற உபகுழுவின் முதலாவது கூட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உபகுழுவின் தலைவர் பதவிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயரை முன்மொழிந்ததுடன்,அதனை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் வழிமொழிந்தார்.
தேயிலை தொழிற்துறையை அபிவிருத்தி செய்தல்,பாலுற்பத்தி தொழிற்துறையை மேம்படுத்தல்,கைத்தொழில் துறைiயை மறுசீரமைத்தல்,உர உற்பத்தி,சுற்றுலாத்துறையை மேம்படுத்தல்,போன்றவற்றில் புதிய யோசனைகளை உள்வாங்குதல் உட்பட நாட்டின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உபகுழுவின் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அற்தந்தத் துறைகள் குறித்து பொருளாதார ஊக்குவிப்பு முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதி தேசிய சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்திய செலாவணிப் பிரச்சினை,கடன் மறுசீரமைப்புப் போன்ற விடயங்கள் குறித்து நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கி,நிதி அமை;சின் அதிகாரிகளை எதிர்வரும் 13ஆம் திகதி குழுவிற்கு அழைத்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உணவு,சுகாதாரம்,போக்குவரத்து மற்றும் வலுசக்தி உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை எதிர்வரும் 14ஆம் திகதி குழுவுக்கு அழைத்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உபகுழு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.