அமெரிக்காவிற்காக பாகிஸ்தான் தூதராக அய்ஜாஸ் அகமது சவுத்ரி நியமனம்

290 0

அமெரிக்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக வெளியுறவுத் துறை செயலாளராக இருந்து வரும் அய்ஜாஸ் அகமது சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதராக இருந்த சையது ஜலில் அப்பாஸ் ஜெய்லானி தனது வேலையை விருப்ப ஓய்வு மூலம் முடித்துக் கொள்வதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், வெளியுறவுத் துறை செயலாளராக இருந்து வரும் அய்ஜாஸ் அகமது சவுத்ரி, அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் சவுத்ரி அடுத்த மாதம் பொறுப்பேற்பார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
58 வயதான சவுத்ரி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரியாக கடந்த 36 வருடங்களாக திறம்பட செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2013-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளராக சவுத்ரி இருந்து வந்தார். அதற்கு வெளியுறவுத் துறை செயலாளராக பணி புரிந்து வந்தார்.ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் நிரந்திர பிரதிநிதியாக இருந்து வந்த தெஹ்மினா ஜன்ஜூவா அந்நாட்டின் முதல் பெண் வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது