பிலக்குடியிருப்பு மக்களுடைய பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு சென்றிருக்கும் நிலையில், ஜனாதிபதி மக்களுடைய காணிகளை மக்களிடமே கையளிக்கும்படி கூறியுள்ளதாக நாம் அ றிகிறோம்.
இந்நிலையில் பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் மக்களிடம் விரைவில் கையளிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
பிலக்குடியிருப்பு மக்கள் 16ம் நாளாக இன்றைய தினம் வரையில் தமது காணிகளை வழங்ககோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக முதலமைச்சரிடம் இன்றைய தினம் கேள்வி எழு ப்பபட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 4ம் திகதி பிலக்குடியிருப்பு மக்களை நேரில் சந்தித்துப்N சியிருந்தேன். அதேபோல் விமானப்படையினரையும் சந்தித்து பேசியிருந்தேன்.
இதன்போது விமானப்பi டயினர் விமான ஓடுபாதைக்கான பாதை ஒன்றை அமைப்பதற்காகவே மக்களுடைய காணிகளை கையகப்ப டுத்தி வைத்திருக்கின்றமை தொடர்பாக அறிந்து கொண்டேன்.
பின்னர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கடிதம் எழுதியிருந்தேன்.
இந்நிலையில் ஜனாதிபதி மேற்படி பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை மக்களிடமே கையளிக்கும்படி கூறியிருப் பதாக நான் அறிந்துள்ளேன்.
அந்த மக்களுக்கு அங்கே காணிகளுக்கான ஆவணங்கள் உள்ளதா? என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் சுமார் 54 குடும்பங்களுக்கு காணிகளுக்கான ஆவணங்கள் உள்ளதாக மு ல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் மக்களுடைய காணிகள் மக்களிடமே வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.