ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு பொய்யாக புனையப்பட்டது

118 0

பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, புனையப்பட்ட முன்னெடுத்து செல்ல முடியாத வழக்கு எனவும், அவ்வாறான பின்னணியிலேயே தொடர்ச்சியாக திகதிகளைப் பெற்று வழக்கை ஒத்திவைக்கும் நடவடிக்கைகளில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஈடுபடுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ குறிப்பிட்டார்.

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று  ( 4) புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.

நேற்று வழக்கு விசாரணைகளின் போது பிணையில் உள்ள ஹிஜாஸ் மற்றும் மெளலவி சகீல் கான் ஆகிய இருவரும் ஆஜராகியிருந்தனர்.

வழக்கானது, செவ்வாய்க்கிமை ( 4) முற்பகல் 10.00 மணிக்கு, புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில்,  சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், ஷெஹானி வத்சலா,  சலன பெரேரா, சஞ்ஜீவ கொடித்துவக்கு ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ ஆஜரானார்.

2 ஆம் பிரதிவாதி  மெளலவி சகீல் கான் சார்பில் சட்டத்தரணிகளான  வீனாஷ்வரி ஜயதிலக, கிரிஷானி வத்சலா உள்ளிட்டோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆஜரானார்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி  நிமேஷா டி அல்விஸ் ஆஜரானார்.

வழக்கை மேற்பார்வை செய்யும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் சட்டத்தரணி  ரஞ்சன் பெரேரா ஆஜரானார்.

வழக்கு விசாரணை ஆரம்பமான போது, அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ்,

‘கனம் நீதிபதி அவர்களே,  இந்த வழக்கு தொடர்பில் வழக்குத் தொடுநருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான சுதர்ஷன டி சில்வா மற்றும் லக்மினி கிரிஹாகம ஆகியோர்  இதற்கு முன்னர் ஆஜராகியுள்ளனர்.

இவ் வழக்கை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவே நெறிப்படுத்தி வந்தார்.  அவர் ட்ரயல் அட்பார் வழக்கொன்றில் ( 4) ஆஜராவாதல் இந்த வழக்குக்கு சமூகமளிக்க முடியாது என அறிவித்துள்ளார்.

அந்த வழக்கு  செவ்வாய், வியாழன்  ஆகிய கிழமைகளில் தொடர்ச்சியாக நடப்பதால், அவ்விரு தினங்கள் தவிர்ந்த வேறு ஒரு தினத்தில் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு  கோருகின்றேன்.’ என தெரிவித்தார்.

இதன்போது மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ விடயங்களை முன் வைத்தார்.

‘கனம் நீதிபதி அவர்களே, எனது சேவை பெறுநர் ஒரு சட்டத்தரணி. அதுவும் அனுபவம் நிறைந்த சட்டத்தரணி.  அவர் வழக்கில் ஆஜராக நீதிமன்றுக்கு வந்துள்ளார்.

நாங்களும் நீதிமன்றுக்கு வந்துள்ளோம்.  எனினும் சட்ட மா அதிபர் திணைக்கள உரிய அதிகாரிகள் வருவதில்லை.  இவ்வாறு நீதிமன்றின் காலத்தை வீண் விரயம் செய்ய அனுமதிக்க முடியாது.

இந்த வழக்குடன் தொடர்புடைய சம்பவத்தில், முதல் பிரதிவாதியைக் கைது செய்த பின்னரேயே,  வழக்குடன் தொடர்புபட்ட முதல் வாக்கு மூலமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நீதிமன்ற விடுமுறைக் காலத்திலும் இவ்வழக்கை விரைவாக விசாரிப்பதற்காக திகதிகள் ஒதுக்கப்பட்டன.  எனினும்  வழக்கை நெறிப்படுத்தும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அப்போதும் மன்றுக்கு வரவில்லை.  வேலைப் பளு காரணமாக அவரால் மன்றில் ஆஜராக முடியவில்லை என அறிவிக்கப்பட்டது.

நீதிமன்ற பணியும் அல்லாத, தனிப்பட்ட பணியும் அல்லாத ஒரு நடவடிக்கையால் நீதிமன்றுக்கு வர முடியாதிருப்பதாக அப்போது அவர் அறிவித்திருந்தார்.

அதனாலேயே நாமும் வரவில்லை.  எனினும் வழக்குக்கு நாம் தயாராகவே இருந்தோம்.

இன்று ட்ரயல் அட்பார் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி வர முடியாது என கூறுயிருக்கின்றார்.  இந்த காரணத்தை கடந்த தவணையின் போதே அவர் அறிந்திருந்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனராலுக்கு முடியாவிட்டால், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன இருக்கின்றார் அல்லவா.  இருவரில் ஒருவராவது வந்திருக்கலாம்.

பொய்யாக புனையப்பட்ட, முன்னெடுத்து செல்ல முடியாத ஒரு வழக்கே எனது சேவை பெறுநருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.  இதற்கு முன்னரும் இவ்வாறான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவை பின்னர் உண்மை என ஒப்புக்கொண்டு மீளப் பெறப்பட்டுள்ளன.

எனினும் இப்போது அப்படியல்ல… திகதிகளைப் பெற்றுக்கொண்டு வழக்குகளை தொடர்ச்சியாக ஒத்தி வைக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர்.

இது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு.  இவ்வாறான வழக்குகள், முடியுமான அளவு விரைவாக நிறைவுறுத்தப்படல் வேண்டும் என சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் உள்ளன.  எனவே  வழக்குத் தொடுநரின் கோரிக்கையை ஏற்காது,  முதல் சாட்சியாளரிடம் 2 ஆம் பிரதிவாதியின் சட்டத்தரணி குறுக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு கோருகின்றேன்.’ என வாதிட்டார்.

இதனையடுத்து 2 ஆம் பிரதிவாதியின் சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவும் மன்றில் வாதங்களை முன் வைத்தார்.

‘  கனம் நீதிபதி அவர்களே, இது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  தொடரப்பட்டுள்ள வழக்கு.  அப்படியானால் முன்னுரிமை கொடுத்து இவ்வழக்கு விசாரிக்கப்படல் வேண்டும் என சட்டத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 22,23 ஆம் திகதிகளில், நீதிமன்ற விடுமுறை காலப்பகுதியிலும் இவ்வழக்கை விசாரிக்க திகதியளிக்கபப்ட்டது.

அன்று பிரதிவாதி தரப்பு ஆயத்தமாக இருந்தது. எனினும் வழக்குத் தொடுநர் வேறு திகதியை கோரினார்.  அன்று, தொழிலின் கெளரவம் மற்றும் ஒழுக்க விழுமியங்களை கருத்தில் கொண்டு நாம் ஆட்சேபனம் வெளியிடவில்லை. இவ்வழக்கின் முதல் சாட்சியாளரிடம் சாட்சியம் பெறும் போது முதல் நாளில், இருவர் வழக்கை நெறிப்படுத்தினர்.  இன்று ஒருவரேனும் மன்றில் இல்லை.  இதனை காரணமாக கொண்டு இவ்வழக்கை ஒத்தி வைக்க நான் ஆட்சேபனம் தெரிவிக்கின்றேன். எனது சேவை பெறுநரை பொலிஸார் கைது கூட செய்யவில்லை. இறுதி நேரத்தில் சட்ட மா அதிபர் கூறியே அவரைக் கைது செய்தனர். பின்னர் ஒருவருடம்  விளக்கமறியலில் இருந்தார்.  குறுக்கு விசாரணை செய்ய நாம் தயார்.’ என தெரிவித்தார்.

இதன்போது மன்றில் இருந்த அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ் ‘ பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம  நெறிப்படுத்தும் எச்.சி. டி.ஏ.பி.3887/2022 எனும் வழக்கு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளிலும் நடக்கிறது’ என தெரிவிக்கையில் குறுக்கீடு செய்த நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, ‘ இவ்வழக்கில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரும் வழக்கை நெறிபப்டுத்தியிருந்தார் அல்லவா?’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரச சட்டவாதி நிமேஷா, ‘ அது தொடர்பில் எனக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கப் பெறவில்லை.  பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் வாதத்தின் போது  கடந்த வழக்குத் தவணையிலும்   ஆஜராகவில்லை என கூறப்பட்டது.  எனினும் அன்று அவர்கள் ஆட்சேபனை முன் வைத்திருக்கவில்லை.’ என குறிப்பிட்டார்.

நீதிபதி : கிரிஹாகம ஆஜராவதில்லை என  அந்த வழக்கின் போது அறிவித்திருந்தார்.

அரச சட்டவாதி நிமேஷா :  எனினும் அன்று அவர்கள் ஆட்சேபனம் முன் வைக்கவில்லை.

நீதிபதி :  தொழில் கெளரவம் காரணமாக அன்று ஆட்சேபனை முன் வைக்கவில்லை என சட்டத்தரணிகள் கூறினார்கள்.

அரச சட்டவாதி நிமேஷாஇ: இந்த வழக்குடன் தொடர்புபட்ட வழக்காவாணங்கள், பிரதி சொலிசிட்டர் ஜெனராலின் பொறுப்பிலேயே உள்ளது.  இன்று (  நேற்று 4)   பிரதிவாதிகளுக்கு குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளித்தால் அது வழக்குத் தொடுநர் தரப்புக்கு பாரிய அநீதியை ஏற்படுத்தும். எனவே குறுக்கு விசாரணைகளுக்கு வேறு ஒரு திகதியை    தருமாறு கோருகின்றேன்.

இதனையடுத்து திறந்த மன்றில் கருத்து வெளியிட்ட நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட,

‘ இவ்வழக்கில் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட தினத்தில்  லக்மினி கிரிஹாகமவுடன் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஒருவரும் ஆஜரானார்.  எனினும் இன்று எவரும் ஆஜராகவில்லை.  அரச சட்டவாதியின் கைகளில் வழக்காவணங்கள் இல்லாத நிலையில்,  இன்று ( நேற்று முன் தினம்  4 ஆம் திகதி) குறுக்கு விசாரணைக்கு அனுமதியளித்தால் அது வழக்குத் தொடுநருக்கு பாதகமாக அமையலாம் என அவதானிக்கபப்டுகிறது.  இந்த வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  வழக்கை அவசரமாக விசாரித்து முடிக்க வேண்டும் என பிரதிவாதிகள் தரப்பு பல தடவைகள் மன்றில் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக வேறு  ஒரு கிட்டிய திகதியை பரிந்துரைக்கவும் .’

பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் : ஒக்டோபர் 14

அரச சட்டவாதி :  லக்மினி கிரிஹாகம மற்றும் சுதர்ஷன டி சில்வா ஆகியோர் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆம் திகதிகளையே முடியுமான திகதிகள் என அறிவித்துள்ளனர்.

நீதிபதி : அவை ஒன்றை மாதங்களுக்கு அப்பால் உள்ள திகதிகள்…. இம்மாதத்துக்குள் ஏதாவது திகதிகள் இல்லையா?

அரச சட்டவாதி :  இவை தான் அவர் அறிவித்த திகதிகள்… இம்மாதம் அவரால் முடியாது என லக்மினி கிரிஹாகம அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதி : ஒக்டோபர் 14 கிட்டிய தினம்… அன்று முடியுமா என கேட்டு பதிலளிக்கவும்

அரச சட்டவாதி : என்னிடம் தொலைபேசி இலக்கம் இல்லை… அலுவலக உதவியாளருக்கு அழைத்து உறுதி செய்கின்றேன்.

நீதிபதி : ஒக்டோபர் 14 முடியுமா என  கேளுங்கள்… வழக்கை பின்னர் விசாரணைக்கு எடுக்கின்றேன்.

15 நிமிடங்களின் பின்னர் வழக்கு மீள விசாரணைக்கு வந்தது. இதன்போது சி.ஐ.டி.யின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அரச சட்டவாதியிடம், லக்மினி கிரிஹாகமவுக்கு இம்மாதம் எந்தவொரு திகதியிலும்   இந்த வழக்குக்காக ஆஜராக முடியாது எனவும் நவம்பர் 25 மட்டுமே அவருக்கு இருக்கும் மிகக் கிட்டிய திகதி எனவும் தெரிவித்ததாக கூறினார்.

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ மன்றில் வாதங்களை முன் வைத்தார்.

‘  சட்ட மா அதிபர் திணைக்களம் தற்போது தவறான வழியிலேயே தனது வேலைகளை முன்னெடுக்கின்றது.  நீதிபதிகளை விலகுமாறு அவர்களது உத்தியோகபூர்வ அறைகளுக்கு  சென்று  கூறுகின்றனர்.  வேறு ஒரு வழக்கில் இது நடந்துள்ளது.  அது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது.  நான் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருடன் இது தொடர்பில் கதைத்தேன்.

இவர்களுக்கு நீதிபதியை பிடிக்கவில்லையாயின் விலகுமாறு கூறுகின்றனர்.  இல்லையெனில் வேறு திகதியை பெற்றுக்கொள்கின்றனர்.  இவை தவறான முன்னுதாரணங்களாக ஆகிவிடக் கூடாது.  அதே போல தான் சி.ஐ.டி.யினர் விசாரணைப் புத்தகங்களை எடுத்துவருவதும் இல்லை.’ என்றார்.

இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள வாதிட்டார்.

‘ இந்த வழக்கின் 1,2 ஆம் சாட்சியாளர்கள் நீதிவான் நீதிமன்றில் இரகசிய வாக்கு மூலம் அளித்திருந்தனர். அவ்வாக்கு மூலங்கள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.  அந்த விசாரணைகளில் இந்த சாட்சியாளர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  அந்த வாக்கு மூலங்கள் அடங்கிய புத்தகத்தை மன்றில் சமர்ப்பிக்க கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அப்புத்தகங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. ‘ என தெரிவித்தார்.

நீதிபதி : சி.சி.டி.யினர் வந்துள்ளனரா?

அரச சட்டவாதி : இல்லை.

நீதிபதி : பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அல்லது சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு முடியுமான கிட்டிய திகதி என்ன?

அரச சட்டவாதி : நவம்பர் 25

நீதிபதி : வழக்கை அந்த திகதிவரை ஒத்தி வைக்கின்றேன்.  1,2 ஆம் சாட்சியாளர்கள் அன்றைய தினம் மன்றில் ஆஜராக வேண்டும். 3 ஆம் சாட்சியாளர்  தற்காலிகமாக விடுவிக்கப்படுகின்றார்.  நீதிவானுக்கு வழங்கிய வாக்கு மூலம் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் முன்னெடுத்த விசாரணை, பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலம் அடங்கிய முழுமையான புத்தகத்தை அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ( சி.சி.டி.) பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடுகின்றேன்.  அத்துடன் சாட்சியாளர்களின் விபரங்கள அடங்கிய புத்தகத்தை அடுத்த தவணை மன்ரில் ஒப்படைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கட்டளை இடுகின்றேன்.

இவ்விரு உத்தரவுகளையும் தொலை நகல் ஊடாக உரியவர்களுக்கு அனுப்ப நீதிமன்ர பதிவாளரை பணிக்கின்றேன். அதற்கு பதிலளித்த அரச சட்டவாதி நிமேஷா, ‘ அது தொடர்பில் எனக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கப் பெறவில்லை.  பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் வாதத்தின் போது  கடந்த வழக்குத் தவணையிலும்   ஆஜராகவில்லை என கூறப்பட்டது.  எனினும் அன்று அவர்கள் ஆட்சேபனை முன் வைத்திருக்கவில்லை.’ என குறிப்பிட்டார்.

நீதிபதி : கிரிஹாகம ஆஜராவதில்லை என  அந்த வழக்கின் போது அறிவித்திருந்தார்.

அரச சட்டவாதி நிமேஷா :  எனினும் அன்று அவர்கள் ஆட்சேபனம் முன் வைக்கவில்லை

நீதிபதி :  தொழில் கெளரவம் காரணமாக அன்று ஆட்சேபனை முன் வைக்கவில்லை என சட்டத்தரணிகள் கூறினார்கள்

அரச சட்டவாதி நிமேஷா: இந்த வழக்குடன் தொடர்புபட்ட வழக்காவாணங்கள், பிரதி சொலிசிட்டர் ஜெனராலின் பொறுப்பிலேயே உள்ளது.  இன்று (  நேற்று முன் தினம் 4)   பிரதிவாதிகளுக்கு குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளித்தால் அது வழக்குத் தொடுநர் தரப்புக்கு பாரிய அநீதியை ஏற்படுத்தும். எனவே குறுக்கு விசாரணைகளுக்கு வேறு ஒரு திகதியை    தருமாறு கோருகின்றேன்.

இதனையடுத்து திறந்த மன்றில் கருத்து வெளியிட்ட நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட,

‘ இவ்வழக்கில் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட தினத்தில்  லக்மினி கிரிஹாகமவுடன் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஒருவரும் ஆஜரானார்.  எனினும் இன்று எவரும் ஆஜராகவில்லை.  அரச சட்டவாதியின் கைகளில் வழக்காவணங்கள் இல்லாத நிலையில்,  இன்று ( நேற்று முன் தினம்  4 ஆம் திகதி) குறுக்கு விசாரணைக்கு அனுமதியளித்தால் அது வழக்குத் தொடுநருக்கு பாதகமாக அமையலாம் என அவதானிக்கபப்டுகிறது.  இந்த வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  வழக்கை அவசரமாக விசாரித்து முடிக்க வேண்டும் என பிரதிவாதிகள் தரப்பு பல தடவைகள் மன்றில் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக வேறு  ஒரு கிட்டிய திகதியை பரிந்துரைக்கவும் .’

பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் : ஒக்டோபர் 14

அரச சட்டவாதி :  லக்மினி கிரிஹாகம மற்றும் சுதர்ஷன டி சில்வா ஆகியோர் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆம் திகதிகளையே முடியுமான திகதிகள் என அறிவித்துள்ளனர்.

நீதிபதி : அவை ஒன்றை மாதங்களுக்கு அப்பால் உள்ள திகதிகள்…. இம்மாதத்துக்குள் ஏதாவது திகதிகள் இல்லையா?

அரச சட்டவாதி :  இவை தான் அவர் அறிவித்த திகதிகள்… இம்மாதம் அவரால் முடியாது என லக்மினி கிரிஹாகம அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதி : ஒக்டோபர் 14 கிட்டிய தினம்… அன்று முடியுமா என கேட்டு பதிலளிக்கவும்

அரச சட்டவாதி : என்னிடம் தொலைபேசி இலக்கம் இல்லை… அலுவலக உதவியாளருக்கு அழைத்து உறுதி செய்கின்றேன்.

நீதிபதி : ஒக்டோபர் 14 முடியுமா என  கேளுங்கள்… வழக்கை பின்னர் விசாரணைக்கு எடுக்கின்றேன்.

15 நிமிடங்களின் பின்னர் வழக்கு மீள விசாரணைக்கு வந்தது. இதன்போது சி.ஐ.டி.யின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அரச சட்டவாதியிடம், லக்மினி கிரிஹாகமவுக்கு இம்மாதம் எந்தவொரு திகதியிலும்   இந்த வழக்குக்காக ஆஜராக முடியாது எனவும் நவம்பர் 25 மட்டுமே அவருக்கு இருக்கும் மிகக் கிட்டிய திகதி எனவும் தெரிவித்ததாக கூறினார்.

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ மன்றில் வாதங்களை முன் வைத்தார்.

‘  சட்ட மா அதிபர் திணைக்களம் தற்போது தவறான வழியிலேயே தனது வேலைகளை முன்னெடுக்கின்றது.  நீதிபதிகளை விலகுமாறு அவர்களது உத்தியோகபூர்வ அறைகளுக்கு  சென்று  கூறுகின்றனர்.  வேறு ஒரு வழக்கில் இது நடந்துள்ளது.  அது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது.  நான் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருடன் இது தொடர்பில் கதைத்தேன்.

இவர்களுக்கு நீதிபதியை பிடிக்கவில்லையாயின் விலகுமாறு கூறுகின்றனர்.  இல்லையெனில் வேறு திகதியை பெற்றுக்கொள்கின்றனர்.  இவை தவறான முன்னுதாரணங்களாக ஆகிவிடக் கூடாது.  அதே போல தான் சி.ஐ.டி.யினர் விசாரணைப் புத்தகங்களை எடுத்துவருவதும் இல்லை.’ என்றார்.

இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள வாதிட்டார்.

‘  இந்த வழக்கின் 1,2 ஆம் சாட்சியாளர்கள் நீதிவான் நீதிமன்றில் இரகசிய வாக்கு மூலம் அளித்திருந்தனர். அவ்வாக்கு மூலங்கள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.  அந்த விசாரணைகளில் இந்த சாட்சியாளர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  அந்த வாக்கு மூலங்கள் அடங்கிய புத்தகத்தை மன்றில் சமர்ப்பிக்க கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அப்புத்தகங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. ‘ என தெரிவித்தார்.

நீதிபதி : சி.சி.டி.யினர் வந்துள்ளனரா?

அரச சட்டவாதி : இல்லை.

நீதிபதி : பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அல்லது சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு முடியுமான கிட்டிய திகதி என்ன?

அரச சட்டவாதி : நவம்பர் 25

நீதிபதி : வழக்கை அந்த திகதிவரை ஒத்தி வைக்கின்றேன்.  1,2 ஆம் சாட்சியாளர்கள் அன்றைய தினம் மன்றில் ஆஜராக வேண்டும். 3 ஆம் சாட்சியாளர்  தற்காலிகமாக விடுவிக்கப்படுகின்றார்.  நீதிவானுக்கு வழங்கிய வாக்கு மூலம் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் முன்னெடுத்த விசாரணை, பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலம் அடங்கிய முழுமையான புத்தகத்தை அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ( சி.சி.டி.) பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடுகின்றேன்.  அத்துடன் சாட்சியாளர்களின் விபரங்கள அடங்கிய புத்தகத்தை அடுத்த தவணை மன்ரில் ஒப்படைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கட்டளை இடுகின்றேன்.

இவ்விரு உத்தரவுகளையும் தொலை நகல் ஊடாக உரியவர்களுக்கு அனுப்ப நீதிமன்ற பதிவாளரை பணிக்கின்றேன்.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின்  3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என  கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக  மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக  பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக  சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைவிட,  பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.