கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் இன்று வழங்கியுள்ளது.
இதன்படி 20 நாய் குட்டிகளை கொள்வனவு செய்து, பயிற்சியளித்து விமான நிலையத்தில் விமானங்களின் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
வெடிபொருட்கள், ஆயுதங்கள், போதைப்பொருட்கள், பணம் மற்றும் சட்டவிரோத பொருட்களை கண்டுபிடிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.