மட்டக்களப்பில், இலங்கை போக்குவரத்து சபையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டுவரும் பிரதி முகாமையாளரை இடமாற்றகோரி போக்குவரத்து சபையின் நடத்துனர்கள் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (5.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தொழிற்சங்க தலைவர் துரைராஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து சபையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட முன்னாள் முகாமையாளருடன் செயற்பட்டுவந்த இந்த பிரதி முகாமையாளர் பல இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் 10 நடத்துனர்களை வேலையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் தொடர்ந்தும் பல ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதற்கான் ஆதாரங்கள் இருப்பதால் அவரை இடமாற்றக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பிவைத்தோம்.
இந்த நிலையில் உதவி முகாமையாளர் எங்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து எங்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
மேலும் எமக்கு நீதி கிடைக்கும்வரை இந்த பணிபஸ்கரிப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.