வீதியால் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

116 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியின் முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒருபகுதியில் வீதி தாழிறங்கி உள்ளது.

எனவே குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.