யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வேலையற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு.

277 0
கிழக்கு  மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரை கிராமமானது யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அன்று முதல் இன்று வரை நிரந்தரமான தொழில் வசதியின் அவலப்படும் நிலையில் ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக படுவாங்கரை பட்டிபளை கடுக்கா முனை கிராமத்தில் 15 மில்லியன் செலவில் மீன் வளர்ப்புத்திட்டமும் அதற்கான கட்டிடமும் அதேபோன்று தும்பங்கேனி எனும் கிராமத்தில் 20 மில்லியன் செலவில் திட்டமும் அதிற்கான கட்டிடமும் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண அமைச்சர் கே.துரைராச சிங்கம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாக பங்கேற்று இவ் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டோ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபதி மாகாண கல்வி அமைச்ர் தண்டாயுதபானி அதன் உறுப்பினர்களான கிருஷ்ணபிள்ளை மற்றும் எம்.நடராஜா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.