இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு (லங்கா ஐ.ஓ.சி)க்கு சொந்தமான வெல்லவாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக, நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (05) பிற்பகல் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் சீல் வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும்
அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து சோதனையை முன்னெடுத்ததாக அவர் தெரிவித்தார்.